IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பணிக்கு திரும்பாவிடில் பிரேக் இன் சர்வீஸ்! – டாக்டர்களுக்கு இறுதி எச்சரிக்கை

941

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக தமிழகம் முவதும் அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் 6வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்படட பெரிய, சிறிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தீவிர அறுவை சிகிச்சைகள் மட்டும் டாக்டர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் ஒருபிரிவு டாக்டர்கள் வாபஸ் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதி மொழியை ஏற்க மறுக்கிறது. மேற்கொண்ட நடவடிக்கை எடுத்து மிரட்டினால் போராட்டம் தீவிரவாகும் என்றனர். இந்நிலையில் கோரிக்கைகள் குறித்து 15 நாளில் பரிசீலிக்கப்படும் என்று கூறியும் போராட்டம் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் செய்திக்குறிப்பில் வெளியிட்டிருப்பது, டாக்டர்கள் ஸ்டிரைக்கை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் டாக்டர்களின் பணிமூப்பு சலுகை ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இத்தகைய அறிவிப்பு டாக்டர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.