IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யை காப்பாற்றுவது கடினம் – மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் பூபதிஜான் கூறுகையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லேசான கொரோனா அறிகுறிகள் தான் இருந்தது. ஆனால் அதன்பின் எட்டாவது முதல் பனிரெண்டாவது நாள் வரை அவரது உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின்னர் கொரோனா வைரஸ் அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதன் பின் அவருக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டன. அதன் பின்னர் அவர் வெண்டிலட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டார். அதன்பின் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதால் நுரையீரல் செய்யும் வேலையை செய்வதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருடைய உடலில் உள்ள மேலும் ஒருசில பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள உலகநாயகன் கமல்ஹாசன் மருத்துவமனைக்குள் சென்று பின்பு வெளியே வரும்போது அவர் கூறுகையில், எஸ்.பி.பி. நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது. எஸ்.பி.பி.யை காப்பாற்று கடினம் என்று மருத்துவர்கள் கூறி இருப்பது பெரும் கவலையாக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader