IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

Get real time updates directly on you device, subscribe now.

துளசி இலை பொதுவாகவே ஒரு புனித இலையாகவே இந்தியாவில் பார்க்கப்படுகிறது. துளசி செடிகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருப்பாதால் தான், அந்த காலம் முதல் தற்போது வரை நாம் வீட்டில் துளசி செடிகளை வளர்த்து வருகிறோம்.

துளசியில் (Basil leaves) சாதாரணமாக காணப்படுவது வெண் துளசிதான். இது மட்டும் இன்றி கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என பல்வேறு வகையான துளசி செடிகள் இருக்கின்றன. இதனை மூலிகையின் அரசி என்றும் கூறுவர்.

தீரா நோய்க்கு மருந்து ( Medicine for all Disease)

இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றைச் சொல்லலாம். நீரிழிவு என்ற சர்க்கரை நோய், ஒபிசிட்டி என்ற உடல் பருமன், பிளட் பிரசர் என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துளசி சாறையும், எலுமிச்சை சாறையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்குப் பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.

துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சாறில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உட்பு, புளி,காரம் குறைக்க வேண்டும்.

காய்ச்சலுக்க்கான மருந்து (Medication for the flu)

காய்ச்சலை குணப்படுத்துவதில் அதிக ஆற்றலை கொண்டுள்ளது துளசி. அனைத்து விதமாக காய்ச்சலுக்கும் துளசி அருமருந்தாக இருந்து வருகிறது. 10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.

Aromatics and Cosmetics

தோல் நோய்களை குணப்படுத்தும் (Cure skin diseases)

துளசி இலைகளை எலுமிச்சை சேர்த்து மைப்போல் அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சேர்த்து அரைத்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

இளமையாக இருக்க (To be young)

சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும் என்கின்றது சித்த மருத்துவம்

துர்நாற்ற பிரச்சனைகளுக்கு (For odor problems)

தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வாய் துர்நாற்றம் நீங்கும். குளிக்கும் நிரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால் அந்த தண்ணீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

மாசுக்களை சுத்திகரிக்கிறது (Purifies pollutants)

இந்த துளசி செடியானது வெரும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை மட்டும் தனக்குள் வைத்துக்கொள்ளாமல் இதன் பங்கு சுற்றுச்சூழலிலும் மகத்தானதாக இருந்து வருகிறது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader