IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உங்களுக்கு அம்ரிதா சேர்கிலைத் தெரியுமா ?

170

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் ஓவியங்களின் மீதுள்ள ஆர்வம் மலுங்கி வருகிறது எனலாம்.

அதே சமயம், பென்சில்களால் வரையத் துவங்கிய ஓவியங்கள் இன்று கம்யூட்டர் உதவியுடன் அதே நேர்த்தியுடனுடன் அழகுடனும் வரையப்படுகிறது.

இந்தியர்களின் புகழ்பெற்ற ஓவியர்களை கணக்கெடுத்தோ மென்றால் ரவிவர்மா, எம்.எப்.உசேன் போன்ற மூத்த ஓவியர்களைத்தான் சொல்ல முடியும். இவர்கள் ஞாபகத்திலும் இருக்கிறார்கள்.

உங்களுக்கு அம்ரிதா சேர்கிலைத் தெரியுமா ?

சுதந்திர போராட்ட காலத்தில் அறியப்பட்ட பெண் ஓவியர். புகழ்பெற்றவர் ; இந்தியாவின் பிரிடா காலோ என்ற புகழை பெற்றவர்.
இன்று இவர் மறைந்த தினம் தான் ! இந்த தினத்தில் இவரைப் பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

பஞ்சாப் சீக்கியத் தந்தைக்கும் அங்கேரி நாட்டின் யூத மதத்தைச் சேர்ந்த தாயாருக்கும் அம்ரிதா சேர்கில் புடாபெசுடு நகரில் 1913, ஜனவரி 30ம் தேதி பிறந்தார்.

1921 முதல் சிம்லா நகரில் வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.

1923 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிலாரன்சு நகரில் கலை மையம் ஒன்றில் மாணவியாகச் சேர்ந்தார்.

இருப்பினும் ஓவியக் கலையில் மேலும் பயிற்சி பெற 1929 இல் பாரீசு நகருக்குப் போனார். அங்கு கவின் கலையில் இளங்கலைப் பட்டமும் பெற்று மேலை நாட்டு ஓவிய வகைகளையும் கற்றுக்கொண்டார்.

இளம்பெண்கள் என்ற பெயரில் அம்ரிதா சேர்கில் வரைந்த ஓவியம் மேலை நாட்டுப் பாணியில் அமைந்திருந்தது. 1934 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் இந்தியாவின் தொன்மைக் கலைகளிலும் இஸ்லாமிய ஓவியங்களிலும் ஆர்வம் காட்டினார்.

1937 இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மணப் பெண்ணின் அறை, பிரம்மச்சாரிகள், தென்னிந்திய கிராமிய வாழ்க்கை என்ற ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றன.

அஜந்தா குகை ஓவியங்களும், இந்திய மக்களின் எளிய வாழ்க்கை நிலைகளும், பெண்களின் நலிந்த வாழ்வும் அம்ரிதாவின் ஓவியங்களில் பதிவாகின.

1938 இல் கொரக்பூரில் வாழ்ந்தபோது இரவிந்திரனாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டார். அதன் விளைவாக வங்காளத்தில் நிகழ்ந்த கலைப்புரட்சியில் தாமும் இணைந்து கொண்டார்.

காந்தியக் கொள்கைகளிலும் அம்ரிதா நாட்டம் கொண்டார். 1941இல் லாகூரில் வாழ்ந்து வந்த அம்ரிதா ஒரு ஓவியக் கூடத்தை அமைத்தார். அங்கு ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில் 6 டிசம்பர் 1941 இல் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

ஒரு கலைஞனின் தன்னுடைய படைப்புகளை காட்சிப்படுத்துவது தான் அவனுக்கு கிடைக்கும் பெரிய மகிழ்ச்சி. ஆனால், இந்த மகிழ்ச்சியை அம்ரிதா பெறவில்லை.

இருப்பினும் அவரது ஓவியங்கள், இந்திய ஓவியக்கலைக்கு என்றுமே உயிரூட்டக்கூடியவையாக இருக்கின்றன.

Indian Womens Scene-1938
Bride’s Toilet, 1937
Roads in New Delhi