IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குடியுரிமை மசோதா எதிர்த்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கைது

177

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக உட்பட எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் சட்ட நகலை எதிர்த்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

குடியுரிமை சட்ட மசோதா நேற்று முதல் நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதலுக்கு பின் நேற்று மசோதா சட்டமானது.

குடியரசு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும் தி.மு.க இளைஞரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

ஆயிரத்திற்கும் மேலான இளைஞரணி தொண்டர்கள் கலந்து கொண்டு பேரணியாகச் சென்று அண்ணா சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டநகலை கிழித்தெழிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை போலிஸார் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மசோதா திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.