மக்களே பார்த்துக் கொள்ளுங்கள்..! திமுகவின் மோசடி குறித்து மாரிதாஸ் விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

திமுக கட்சியின் ஹேஷ்டேக்குகள் அடிக்கடி டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் இவை பணம் கொடுத்து செய்யும் மோசடி வேலை என்பது தற்போது அம்பலமாகியுள்ளதாக மாரிதாஸ் விளக்கமளித்துள்ளார்.

திமுக கட்சி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரிப்பதை விட சமூக வலைதளங்களில் விரைவில் பொதுமக்களை எளிதில் சென்றடைந்து விடலாம் என எண்ணி, அக்கட்சியின் தேர்தல் வேலை செய்வதற்காக ஐபே குழுவுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இதற்காக திமுக கட்சியிடம் 380 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. இந்த ஐபேக் டீம் சென்னையிலும் இருக்கிறது. ஆனால், பீகாரில் உள்ள டீம், திமுக குறித்த டுவிட்டர் ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் ஆக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. திமுகவின் மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் மாரிதாஸ், இதையும் அம்பலப்பத்தி இருக்கிறார்.

’’மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்…திமுக கட்சிக்குப் பீகாரில் இருந்து தான் 80% டிவிட் போட்டு பொய்யான பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் மூலம் உருவாக்குகிறார்கள் என்பதற்கு ஆதாரம்.

இது தான் திமுக செய்யும் பித்தலாட்டம். இங்கே காசை கொடுத்து அனைத்தையும் விலைக்கு வாங்க திமுக தலைமை ஸ்டாலின் குடும்பத்துக்கு உண்டு. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த கீழ்த்தரமான டிரண்ட் மோசடி’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More