IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி! பொதுமக்கள் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கடந்த 2 மாதகாலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். இதனையடுத்து ஜூன் 3 கலைஞர் பிறந்த தினத்தை ஒட்டி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள் வழங்க முடிவு செய்திருந்த ஆலோசனை செய்து இருந்தார்.

இந்நிலையில் ஜெ.அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் காரணமாக குரோம்பேட்டை ரேலா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து அவருக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டதில் பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இன்று காலை ஜெ. அன்பழகனுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader