IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தலுக்கு பயந்து வழக்கு தொடர்கிறதா திமுக..?

117


தமிழகத்தில் தற்போது 5 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே பழைய மாவட்டங்களாக இருந்தபோது உள்ளாட்சி இடங்கள், பதவிகள் ஒதுக்கியவாறு தேர்தல் நடக்கும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது.

அதில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் தொகுதி வரையறை மற்றும் இடஒதுக்கீடு, உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்க மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தங்களது மனுவை அவசரகால வழக்காக எடுத்துக் கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் இன்று மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் திமுக சார்பில் போடப்பட்ட வழக்கு தான் என அதிமுக குற்றம்சாட்டி வந்தது. அதன் பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை காரணம் காட்டி திமுக சார்பில் மீண்டும் ஒரு மனு கொடுத்திருப்பது திமுகவில் ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

எனவே உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைவர்களை சந்திக்க திமுக பயப்படுகிறது எனவே தான் மாறி மாறி திமுக வழக்கு தொடர்கிறது என அதிமுக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது. அது திமுகவிற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.