தேவரை அவமதித்தாரா மு.க.ஸ்டாலின் ? டுவிட்டரில் டிரெண்டாகும் ஸ்டாலின்!

Get real time updates directly on you device, subscribe now.

தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவரது குரு பூஜையான நேற்று (அக்டோபர் 30) அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறி நெட்டிசன்கள், டுவிட்டரில் #GobackStalin என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர். இன்று (அக்டோபர் 31) #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாளாக அக்டோபர் 30 அன்று ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை நடப்பது வழக்கம். அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்திகின்றனர்.

இந்நிலையில் தேவர் குருபூஜையில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின்பு பசும்பொன் சென்று அங்கும் மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்க தேவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த சமூகவலைதளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் #Gobackstalin என்ற ஹேஷ்டேக்கை அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். இதனையடுத்து டுவிட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கு உடன் #Pasumpon, #தேவர்ஜெயந்தி போன்ற ஹேஷ்டாக்குகளும் டிரெண்ட் ஆனது.

#தேவரை_அவமதித்த_ஸ்டாலின்  #சமத்துவதலைவர்ஸ்டாலின்

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More