IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி: திமுகவை முந்திய அதிமுக

54

 

இன்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுகவை விட அதிக இடத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய தலைவர், துணைத்தலைவருமான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடைபெறாத நிலையில் மற்ற 26 மாவட்ட ஊராட்சி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

Related Posts
1 of 18

தூத்துக்குடி,கன்னியாகுமரி,ஈரோடு,அரியலூர்,திருப்பூர்,விருதுநகர்,தேனி,கோவை,நாமக்கல், தருமபுரி,கரூர்,புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அதிமுகவும், சேலத்தில் அதிமுக கூட்டணி பாமகவும் பெற்றுள்ளன.ஷ
தஞ்சாவூர்,மதுரை,ராமநாதபுரம்,திருவாரூர், நீலகிரி,திருவள்ளூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கிருணகிரி ,திருச்சி, பெரம்பலூர் ஆகிய 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை திமுக பெற்றுள்ளது.

கடந்த 2ந்தேதி வெளியிடப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுகவை விட குறைந்த வெற்றி சதவீதத்தை பெற்ற அதிமுக, இன்று நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிகளவு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

#District #Panchayath #Chairman #DMK #ahead #ADMK