IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மே 25 முதல் திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் விநியோகம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகப்புகழ் திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம், வருகின்ற மே 25ம் தேதி முதல் பக்தர்களுக்கு கிடைக்கும் எனவும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத்திலும் திருப்பதி லட்டு விரைவில் விற்பனைக்கு வருகிறது எனவும் திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் திருமலை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன. சாமி தரிசனம் செய்யாவிடிலும் திருப்பதி லட்டு பிரசாதம் கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டதற்கு இணங்க பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம், ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

ஆந்திராவில் உள்ள, 13 தேவஸ்தான மாவட்ட மையங்களிலும் இந்த லட்டு விற்பனை, வரும், 25 முதல் துவங்க உள்ளது. பொது முடக்கம் காரணமாக, லட்டு விலையை, 50 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக தேவஸ்தானம் குறைத்துள்ளது. இந்த லட்டு பிரசாதத்தை, 1,000த்துக்கு மேல் மொத்தமாக வாங்கி, மற்றவர்களுக்கு அளிக்க நினைக்கும் பக்தர்கள், தங்கள் பெயர், வயது, முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை, ஐந்து நாட்களுக்கு முன், tmlbulkladdusgmail.com என்ற முகவரிக்கு, மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

லட்டு பிரசாதம், ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல், இதர அண்டை மாநிலங்களான தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா தலைநகரங்களிலும், விரைவில் விற்பனைக்கு வரும். ‘லட்டு குறித்த மற்ற விபரங்களுக்கு, தேவஸ்தான, ‘டோல் ப்ரீ’ எண்களான, 18004254141 மற்றும், 1800425333333ல் தொடர்பு கொள்ளலாம்’ என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader