IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மரங்களை தாக்கும் நோய்கள் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Get real time updates directly on you device, subscribe now.


மரம் வளர்ப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களில் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் அதிக இலாபம் பெறலாம்.


இலை அழிவு நோய் :


இலைகள் வறண்டு உதிர்ந்து விடும். நாற்றங்காலில் நெருக்கமாக வைப்பதால் ஏற்படுகிறது. நோய் தாக்கிய செடிகளை நீக்கி விடவேண்டும். பின்னர் டைத்தேன் எம் 45 பூஞ்சாளக் கொல்லியை 0.1 சதவீதம் தெளிக்கவேண்டும்….


அழுகல் நோய் :


கழுத்து பகுதி சுருங்கியும் இலைகள் கருகியும் வாடியும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த பிளாண்டோமைசின் 0.1 சதவீதம் மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.


இளை துரு நோய் :


இலைகளின் மேல்பரப்பில் ஆரஞ்சு நிறப்புள்ளிகள் தோன்றி இலைகள் துருப்பிடித்தது போல் காணப்படும். மேலே குறிப்பிட்டது போல் கந்தக தூளை தூவுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.


வெண்படல பரவு நோய் :


இலை முழுவதும் பவுடர் பூசியது போல் வெண்ணிறப்படலம் காணப்படும். இதனால் இலைகள் ஒளிச்சேர்க்கை செய்யமுடியாமல் இறக்க நேரிடும். கந்தகத்தூளை இலைகளில் தூவுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.


தண்டு மற்றும் வேர் பாதிப்பு நோய்:


நாற்றுகளின் இலைகள் மஞ்சளாகவும் வேர்கள் அழுகியும் காணப்படும். இது அதிக நீர் தேங்குவதால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த எமிசான் 6 என்ற மருந்தை 0.01 சதவீத கரைசலை இலைகளில் தெளித்தும், வேர் அருகில் மண்ணிலும் ஊற்ற வேண்டும்.


இலைப் புள்ளி நோய் :


ஆரம்ப நிலையில் இலைகளில் ஊதாவிலிருந்து பழுப்பு நிறம் வரை புள்ளிகள் காணப்படும். படிப்படியாக தீவிரமடையும் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த பெவிஸ்ட்டின் மருந்தினை 0.01 சதவீதம் தெளிக்கவேண்டும். மேலும் நோய் எதிர்ப்புசக்தி மிக்க, வீரியம்மிகுந்த தரச்சான்று பெற்ற விதைகளை தேர்ந்தெடுத்து பயிர்செய்யவேண்டும்.


#Diseases #attack #trees #control

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader