IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்

Get real time updates directly on you device, subscribe now.


திண்டுக்கல் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற அரசுபேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் செல்வதை கண்ட இளைஞர்கள் சற்றும் யோசிக்காமல் ஒருகல்லை போட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திண்டுக்கல் டூ சிலுக்குவார்பட்டி செல்லும் அரசுப்பேருந்து ஒன்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.பேருந்து சிறிது தூரம் சென்றபிறகுதான் பிரேக் பிடிக்கவில்லை என ஓட்டுநருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பேருந்தை நிறுத்த ஓட்டுநர் மிகவும் முயற்சி செய்தார். ஆனால் பேருந்து நின்றபாடில்லை. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்தனர்.


பஸ் பிரேக் பிடிக்காமல் மெதுவாக வருவதைக்கண்ட இளைஞர் ஒருவர் உடனடியாக, ஒருபெரிய கல்லை போட்டு பஸ்ஸை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. அதன்பிறகு பஸ்ஸிற்குள் இருந்த பயணிகள் எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக இறக்கப்பட்டனர்.


பிரேக் பிடிக்காமல் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader