IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொல்லி சர்ச்சையில் சிக்கிய திண்டுகல் சீனிவாசன்

Get real time updates directly on you device, subscribe now.

 

யானைகள் முகாமை பார்வையிடச் சென்ற அமைச்சர் பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்றிவிடச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலை தெப்பக்காடு, டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது. 48 நாட்கள் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நடந்து செல்லும் போது திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பு, புல்வெளியில் சிக்கிக் கொண்டது. அப்போது, அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்த அமைச்சர், தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறினார். அந்த சிறுவனும் அதை செய்தார். இந்த சம்பவத்தை கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

#Dindigul #Srinivasan #issue

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More