IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

28


திண்டுக்கால் மாவட்டம் பாடியூர் அருகே பள்ளிவேன் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. பள்ளி வேன் கவிழ்ந்ததில் 30 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க முற்பட்டபோது பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானது.

Related Posts
1 of 29


விபத்து நிகழ்ந்ததையடுத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 5 குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.


காலையில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.