IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கு உத்தரவின் போது ஆட்டோவில் ஹாயாக ஊர் சுற்றித் திரிந்த வெளிநாட்டு தம்பதி

93

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் நாடு முழுவதும் திணறி வருகின்றன. வைரஸை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்து யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்தி இருக்குமாறு மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் வெளிநாட்டு தம்பதி ஒன்று ஆட்டோவில் ஊர் சுற்றித் திரிந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென பழுதாகி நின்றது. அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் ஆட்டோவில் வெளிநாட்டினர் இருப்பதைக் கண்டு பதறி போயினர். பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Related Posts
1 of 10

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரான்சு நாட்டு தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இந்த வெளிநாட்டு தம்பதியினர், அங்கு ஒரு ஆட்டோ ஒன்றை வாங்கி, அதன் மூலம் சென்னைக்கு செல்வது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் கொரனோ பரிசோதனைக்கு போலீசார் அழைத்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள், 6 முறை சோதனை செய்து விட்டதாக தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் மூலம் கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது, இவர்கள் இப்படி ஹாயாக ஆட்டோவில் வலம் வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More