IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் டிஜிட்ஆல் சங்கமம் 2020 கோலகலமாக ஆரம்பம்

Get real time updates directly on you device, subscribe now.

பெரிதும் எதிர்பார்த்த டிஜிட்ஆல் சங்கமம் 2020 (இணையமாநாடு) இன்று மதுரையில் தொடங்கியது. ஒரேநாளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு நவீன அம்சங்களையும், எதிர்கால யுக்திகளையும் அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பினை டிஜிட்ஆல் சங்கமம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்திய முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம்தேதி தொடங்கப்பட்ட டிஜிட்-ஆல் அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமாகும். இந்த அமைப்பு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக சங்கமம் என்ற பெயரில் பிரமாண்ட ஒரு நாள் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த மாநாடு தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

டிஜிட்-ஆல் சங்கமம் 2020 – மெய்நிகர் உச்சிமாநாடு (DIGIT-ALL SANGAMAM 2020 – VIRTUAL EDITION) என்ற பெயரில் இன்று 10-10-2020 (சனிக்கிழமை) இணையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட புதுயுக தமிழ் தொழில்முனைவோர்கள் பேசி வருகிறார்கள். இலவச அனுமதியோடு நடைபெறும் இந்த மாநாட்டில் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Intellectual Property Protection | Trade Marks

டிஜிட்ஆல் மெய்நிகர் உச்சி மாநாடு ஆன்லைன் மூலம் சங்கமம் 2020 நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10 இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. முழுக்க முழுக்க தமிழில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சைபர் பாதுகாப்பு, தொழில்முனைவோர், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு சமூக ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுவது, இளம் தொழில்முனைவோருக்கான வெற்றிக் கதைகள், புதிய டிஜிட்டல் உலகுக்கு தயாராகுதல், வளர்ந்து வரும் ஓடிடி தளங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசி வருகின்றனர். தொழில்முனைவோர், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும், என்றனர்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader