IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தகவல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த உலகளாவிய மெய்நிகர் உச்சி மாநாடு டிஜிட்-ஆல் சங்கமம் 2020

Get real time updates directly on you device, subscribe now.

  • அக்டோபர் 10ம்தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது
  • அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோர்கள் பேசுகிறார்கள்
  • மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்வதற்கான லிங்க் :     

https://digitallindia.org/sangamam-2020/

 

தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸின் ஒரு அங்கமான டிஜிட்-ஆல் அமைப்பின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த  உலகளாவிய மெய்நிகர் உச்சி மாநாடு ”டிஜிட்-ஆல் சங்கமம் 2020 அக்டோபர் 10ம்தேதி  ஆன்லைன் மூலம் நடக்கிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த  18க்கும் மேற்பட்ட புதுயுக தமிழ் தொழில்முனைவோர்கள் பேசுகிறார்கள். இலவச அனுமதியோடு நடைபெறும்  இந்த மாநாட்டில் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்திய முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம்தேதி தொடங்கப்பட்ட டிஜிட்-ஆல் அமைப்பு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமாகும். இந்த அமைப்பு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக சங்கமம் என்ற பெயரில் பிரமாண்ட ஒரு நாள் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. டிஜிட்-ஆல் சங்கமம் 2020 – மெய்நிகர் உச்சிமாநாடு (DIGIT-ALL SANGAMAM 2020 – VIRTUAL EDITION) என்ற பெயரில் வருகிற 10-10-2020 (சனிக்கிழமை) நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட புதுயுக தமிழ் தொழில்முனைவோர்கள் பேசுகிறார்கள். இலவச அனுமதியோடு நடைபெறும் இந்த மாநாட்டில் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Intellectual Property Protection | Trade Marks

இந்த மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இதில் டிஜிட்-ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து, சங்கமம் 2020 ஒருங்கிணைப்பாளார் எம்.சாஹித் அலி, துணைத்தலைவர்கள் சரவணன் ராம்தாஸ், வி.மதன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் சங்கமம் 2020 பற்றி பேசினார்கள். அப்போது, கொரோனா காலத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. நாடு பெரிய டிஜிட்டல் புரட்சியை எதிர்கொள்ளப் போகிறது. நம்முடைய மக்களும் டிஜிட்டல் அறிவைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிறிய தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய தொழிற்சாலைகள் வரை அனைவருமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். டிஜிட் ஆல் அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக சங்கமம் என்ற உச்சி மாநாட்டை மதுரையில் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக மெய்நிகர் உச்சி மாநாடாக ஆன்லைன் மூலம் சங்கமம் 2020 நடைபெறவிருக்கிறது.  அக்டோபர் 10ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாநாடு நடக்க உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சைபர் பாதுகாப்பு, தொழில்முனைவோர், அரசியல்வாதிகள்  மற்றும் பிரபலங்களுக்கு சமூக ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுவது,  இளம் தொழில்முனைவோருக்கான வெற்றிக் கதைகள், புதிய டிஜிட்டல் உலகுக்கு தயாராகுதல், வளர்ந்து வரும் ஓடிடி தளங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசவுள்ளனர். தொழில்முனைவோர், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும், என்றனர்.

Intellectual Property Protection | Trade Marks

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், நேச்சுரல் நிறுவனத்தின் சிஇஓ & துணை நிறுவனருமான சி.கே.குமாரவேல், அமெரிக்காவைச் சேர்ந்த வார்ப்டேல் டெக்னாலஜிஸ் இன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சி.இ.ஓ. கணேஷ் ராதாகிருஷ்ணன், டெக்பெட்ஜ் டாட் காம் நிறுவனர் & சி.இ.ஓ. பிரபாகரன் முருகையா, ஜப்பான் ஜாப்பானிஸ் மார்க்கெட் & எண்டர்பிரைஸ் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் பிரசன்னா பார்த்தசாரதி, ப்ளாக்‌ஷிப் நிர்வாக இயக்குனர் ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், கனடா டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் ஒண்டாரியோ பப்ளிக் சர்வீஸ் மேனேஜர் ஞானமூர்த்தி செங்கோடன், நேஷனல் சைபர் சேப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் டாக்டர் இ.காளிராஜ், வேலியண்ட் டெக்னாலஜிஸ் குரூப் சி.இ.ஓ. டாக்டர் கே.ராமசுப்பிரமணியம், அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி சிகாகோ துணைத் தலைவர் சார்லி ஜெகநாதன், மேக்கப் ஸ்டூடியோ நிறுவனர் ஜி.சுரேஷ்குமார், பைட் டிஜிட்டல் நிறுவனர் பஹீம் அகமத், மேக்கப் ஸ்டூடியோ சிடிஓ & துணை நிறுவனர் ஜார்ஜ் கிறிஸ்டோபர், ஜியோவியோ ஹெல்த்கேர் சி.இ.ஓ மற்றும் துணை நிறுவனர் எம்.செந்தில்குமார், நேஷனல் சைபர் டிபென்ஸ் ரிசர்ஜ் செண்டர் ஜே.தினேஷ்பாண்டியன், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் எழுத்தாளர் சுபிக்‌ஷா வெங்கட், நியூயார்க் டெக்னாலஜி ரிஸ்க் மேனேஜ்மெண்ட் ப்ரியா மவுலி, டெர்ன் எக்ஸ்பர்ட் சோஷியல் மீடியா கண்சல்டண்ட் டைரக்டர் சங்கீதா எஸ்.அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க அறக்கட்டளை தலைவர் எஸ்.ரத்தினவேலு, தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன், தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வி.நீதிமோகன், டிஜிட்-ஆல் தலைவர் ஜே.கே.முத்து, துணைத்தலைவர்கள் சரவணன் ராம்தாஸ், மதன் விப்ரநாராயணன்,  டிஜிட்-ஆல் சங்கமம் 2020 ஒருங்கிணைப்பாளர் எம்.சாகித் அலி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் யு.சங்கர்கணேஷ், ஆர்.கிஷோர், வருண் ஜெயபாலன், எம்.ராஜ்குமார் மற்றும் குழுவினர் செய்து வருகிறார்கள்.

Intellectual Property Protection | Trade Marks

Press Meet Video Link for Your Ref:

https://drive.google.com/file/d/1BhnlbZjf_Ia4YLorsar3_PJc_NHFuOkN/view

For more details, Kindly contact,

JK MUTHU: CHAIRMAN, DIGITALL : 9345228184.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader