IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா?

0 12


பீட்சா, பிஸா, பிட்சா, பிஜ்ஜா [பொதுவாக வட இந்தியர்களால்] இப்படி அழைக்கப் படுகிற இந்த பீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? இன்று இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் பீட்சா பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதாம்.


ஆனால் பீட்சா இத்தாலியிலிருந்து தான் வந்தது எனச் சொல்லும்படி ஆனதற்குக் காரணம் இத்தாலி ராணியான Margherita of Savoy (Margherita Maria Teresa Giovanna என்கிற மெர்கரிட்டா தான் காரணம்.


ஒரு நாள் தன் கணவரோட நகர்வலம் வரும்போது ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டையான சப்பாத்தி போன்ற ஒன்றைப் பார்த்த ராணிக்கு அந்த ஏழையின் ரொட்டி மேல் ஒரு அல்ப ஆசையாம்! வாங்கிச் சாப்பிட்டு மிகவும் பிடித்து விட, அரண்மணை சமையல்காரருக்கு ஆணை பிறப்பித்து விட்டார்.


‘எனக்கு தினமும் இது வேணும்!’. அவரும் சரியான ஜால்ரா பேர்வழி போல –ரொட்டியை தயார் செய்து, அதன் மேலே தக்காளி, துளசி, பாலாடைக் கட்டி ஆகியவை கொண்டு இத்தாலி நாட்டு கொடி போல செய்து, அதற்கு ”MARGHERITA PIZZA” எனப் பெயரும் வைத்து விட்டாராம்.


ராணியே விரும்பி சாப்பிடற உணவுன்னு இந்த பீட்சா புகழ் எல்லோருக்கும் பரவ ஆரம்பித்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, போன்ற நாடுகளுக்கும்,கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பீட்சா புகழ் பரவ ஆரம்பித்து, இன்று பட்டி தொட்டிகளில் கூட பீட்சா கிடைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.


இட்லியும் கெட்டிச் சட்னியும் வெச்சு அடிச்சவர்கள் கூட இன்று பீட்சாவும் பர்கரும் கேட்கிறார்கள். ”இட்லி போரும்மா” என்று சொல்லும் குழந்தைகளைத் திருப்திப்படுத்த, “பீட்சா இட்லி செய்வது எப்படி?” ன்னு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.


பீட்சா உலகளவுல பல ஜோக்குகளுக்கு காரணகர்த்தா. கம்பெனி முதலாளி கம்பெனிக்குள்ள வந்துட்டு இருந்தாராம். வாசல்ல ஒரு பையன் சும்மா நின்னுட்டு இருந்தானாம்.


அவனைப் பார்த்து ‘உனக்கு எவ்வளவு சம்பளம்”னு கேட்டாராம் முதலாளி. அவன் சொன்னானாம் – ”வாரத்துக்கு பத்து டாலர்”னு. ”இந்தா முப்பது டாலர்” – வெளியே போ. சும்மா நிக்கறதுக்கா உன்னை வேலைக்கு வெச்சேன்” அப்படின்னு கேட்டு அனுப்பினாராம்.


அதை மத்த தொழிலாளிகள் பார்க்க, “சும்மா இருந்தா உங்களுக்கும் இதே தான்!”அப்படின்னு எச்சரித்தாராம். அப்புறம், தொழிலாளி கிட்ட கேட்டாராம், ‘வெளியே அனுப்பின தொழிலாளி பேர் என்ன”என்று. அதற்கு அந்த தொழிலாளி சொன்ன பதில் – ‘அவர் பேர் எல்லாம் தெரியாது. ஆனா அவர் பீட்சா டெலிவரி பண்ண வந்தவர்” அப்படின்னு!