IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

துணை முதல்வருடன் அமைச்சர்கள் சந்திப்பு – அதிமுகவில் பரபரப்பு

Get real time updates directly on you device, subscribe now.

சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார்இ உதயகுமார் மற்றும் வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.

வருகின்ற சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால் துணை முதல்வர் ஓபிஎஸ் அக்டோபர் 2 பெரியகுளம் வந்தார். அங்கு அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏக்கள் மற்றும் கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தின் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

பின்பு முதல்வர் தரப்பிடமிருந்து சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்ததால் பன்னீர் செல்வம் பெரியகுளத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு காரில் புறப்பட்டு சென்னைக்கு சென்றார். நாளை அக்டோபர் 7 அன்று முதல்வர் வேட்பாளர் யார் என்று சமரசத்திற்கு பிறகு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை திரும்பிய ஓ.பன்னீர் செல்வம், வீட்டில் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader