IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டெங்கு காய்ச்சல் – முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு

9

ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் மழைநீர் தேங்காதவாறும் நீர்த்தேக்கப் பள்ளங்கள் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கியிருக்கும் நல்ல நீரில்தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன என்றும் அக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது என்றும்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் இருந்தால் அவற்றில் தேங்கும் தண்ணீர் மூலம், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு அபாயம் இருப்பதால் அவற்றை உடனே அப்புறப்படுத்த  வேண்டும்.

தேவையற்ற பொருட்கள் மண்பாண்டங்கள், குடங்கள், ஆட்டுகல், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, வீட்டைச் சுற்றியும், மாடியிலும் போட வேண்டாம் என வலியுறுத்தவும், வழிதடங்கள், தெருக்களில் உட்பகுதியில் டயர்கள் இல்லாவண்ணம் பார்த்துக்கொள்ளவும்

நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, நோய்க்கான அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள்,குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள், டிரம்கள், சிண்டெக்ஸ் ஆகியவற்றையும் முறையாக சுத்தப்படுத்தவும், அனைத்து நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரின் உரிய அளவில் இருப்பதை சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள்திரையங்குகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கொசுப்புழு வளராமல் தடுக்கசிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

அனைத்து குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் வீடுகளிலுள்ள மேல்நிலை தொட்டிகள் யாவும் கொசு உட்புகாமல் முழுமையாக மூடிவைக்கப்பட வேண்டும். அனைத்து கழிவுநீர் தொட்டிகள் கொசு புகாவாதவாறு அதன் மேலுள்ள காற்று குழாய்களில் கொசுவலைகட்டப்பட வேண்டும்.