IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

Get real time updates directly on you device, subscribe now.


மழைக்காலங்களில் பரவும் நோய்களுள் ஒன்று டெங்கு காய்ச்சல். பொதுவாக டெங்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தொடங்கும். ஆனால் சாதாரண காய்ச்சல்தான் என்று அலட்சியமாக இருந்து விட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும். அதனால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அனுகுவது நல்லது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த காய்ச்சல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவதும் இல்லை.


டெங்கு காய்ச்சல் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகைகளை கொண்ட நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி என்கிற வகையிலான கொசுக்கள் மூலம் உருவாகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது கிடையாது.


வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் இவ்வகை கொசுக்கள் தான் டெங்குவை பரப்புகின்றன.

டெங்குவை விரட்ட இந்த இலையின் சாறு குடித்தால் போதும்!


காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவை தாண்டிவிடும். இத்தகைய அதிக வெப்பநிலை அளவை கட்டுப்படுத்த மருந்துகளை சாப்பிடுவதை தவிர முழுமையாக ஓய்வு எடுப்பதும், சத்தான உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. மேலும் நமது உடலில் இரத்ததில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைகிறது.


டெங்குவைத் தவிர்க்க அந்த கொசுவை ஒழிப்பதே ஒரே வழியாகும்


#Dengue #fever #Symptoms

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader