IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மழையால் சேதமடைந்த சாலை சீரமைப்பு

68

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்ததை தொடர்ந்து சோழியக்குடி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதனால் இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு சாலையோரத்தில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதையடுத்து அப்பள்ளியில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்களை சந்திக்கும் அபாயம் உருவானது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முள் ஜாமியா, ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் அந்த பள்ளத்தில் மணல் மூடைகளை அடுக்கியும் எந்திரம் மூலமாக அந்த பள்ளத்தை மூடவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நம்புதாளையில் பல இடங்களில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
புதுப்பட்டினம் ஊராட்சி வீரசங்கிலிமடம் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் வடிகால் ஏற்படுத்தி அகற்றப்பட்டது.