IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டெல்லியில் வரலாறு காணாத கடும் குளிர் – பொதுமக்கள் அவதி

74

டெல்லியில் வரலாறு காணாத கடும் குளிரால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர்.

டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவால் குளிர் வாட்டி வதைக்கின்றது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts
1 of 3

குறிப்பாக டெல்லியில் 118 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் 4,3 என குறைந்த குளிரின் தன்மை, இன்று காலை 2.4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்துள்ளதால் டெல்லியில் வாழும் மக்கள் ஏதே காஷ்மீரில் வசிப்பது போல் உணர்ந்தனர்.

அதிக குளிரின் காரணமாக டெல்லியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குளிரிலிருந்து காத்துக் கொள்ள மக்கள் அனல் மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு குளிரின் தாக்கம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.