IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை

Get real time updates directly on you device, subscribe now.

 

புதுடில்லியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

புதுடில்லி சட்டசபையில் கடந்த 8ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஆம்ஆத்மி கட்சி முன்னிலையில் வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 54 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ்ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

மேலும் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜக முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருவதால் 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆவது உறுதியாகியுள்ளது. மேலும் இன்று மதியத்திற்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More