IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

போதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே! அதிர்ச்சித் தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

பாலிவுட்டில் பெரும் புயலாக வீசும் போதைப் பொருள் விவகாரத்தில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, போதைப் பொருள் பற்றி விவரிக்கும் வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் சகஜமாக பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேசிய போதைப் பொருள் புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியா, அவரது சகோதரர் ஷோவிக், சுஷாந்தின் மேலாளர் மற்றும் சமையல்காரர் உட்பட பலரை கைது செய்துள்ளனர். அவர்கள் அளித்து வாக்குமூலத்தில் வாட்ஸ்ஆப் சாட்கள் மூலம் இந்த விவகாரம் பெரியளவில் விரிவடைந்துள்ளது.

இததொடர்பாக பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவை நேரில் ஆஜராக என்.சி.பி. சம்மன் அனுப்பியது. அதற்கு முன்னதாக ரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீபிகாவின் மேலாளர் கரீஷ்மா, திறன் மேலாளர் ஜெயா ஷா ஆகியோரை விசாரித்தனர்.

ஜெயா ஷாவின் வாட்ஸ்ஆப் சாட்களை மீட்டு பார்த்தபோது போதைப்பொருள் பற்றி விவாதிக்க தனி வாட்ஸ்ஆப் குரூப் உள்ளதாகவும் அதன் அட்மின் தீபிகா படுகோனே இருந்ததாகவும், ஜெயா ஷா என்.சி.பியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader