IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குடிமகன்களுக்கான தீபாவளி ஜாக்பாட் – ரூ.385 கோடி மதுவிற்பனை இலக்கு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் குடிமகன்களை வரவேற்கும் விதமாக தீபாவளி தினத்தை முன்னிட்டு அரசு டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.385 மதுபானம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து துறைகளையும் விட மதுபான விற்பனை களை கட்டும் குறிப்பாக விழாக்காலங்களில் இன்னும் சிறப்பாக விற்பனை நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் மதுவிற்பனை சிறப்பாக இருக்கும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

இந்த சூழ்நிலையில் 3 நாட்களில் ரூ.385 கோடி மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை 25ம் தேதி 80 கோடிக்கும், 26ம் தேதி சனிக்கிழமை ரூ.130 கோடிக்கும், 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் வரும் 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை 3 நாட்களில் விற்பனை செய்ய இருப்பதற்காக இருப்பு வைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.320 கோடிக்கு மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக ரூ.600 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader