IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தீபாவளி விடுமுறை குறித்து அரசு மற்றும் பள்ளி ஊழியர்கள் குழப்பம்

0 48

வருகின்ற அக்டோபர் 27ம் தேதி தீபாவளி தினமாக அனைவரும் கொண்டாட இருக்கின்றனர். தீபாவளி திருநாள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் அக்டோபர் 26 சனிக்கிழமை தினமும் அரசு விடுமுறை நாள் என வாட்ஸ்ஆப்பில் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழர்களின் முக்கிய திருநாளான தீபாவளி தினத்தை இந்துக்கள் திருநாளாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி திருநாளுக்காக ஒரு மாதத்திற்கு முன்பே புதிய ஆடைகள் எடுக்கவும் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் முக்கிய விழாவாகும்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்திற்காக இரண்டு அல்லது மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும். ஆனால் அந்த விடுமுறை நாட்களை முறையாக முதலில் அரசு அறிவிப்பதில்லை. சமூக வலைதளங்களில் தீபாவளி மற்றும் பொங்கல் தினத்தன்று இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை என பரவச் செய்வார்கள். பின்பு முறையாக அரசு விடுமுறை என்று அறிவிக்கும்.

ஒரு சில விழாக்களில் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் விடுமுறை என்று பரப்பி வந்தாலும் அரசாங்கம் விடுமுறை கிடையாது என்று அறிவித்ததும் இருந்துள்ளது. சென்ற வருடம் தீபாவளி தினம் நவம்பர் 7 புதன் கிழமை வந்தது. ஆனால் அரசு விடுமுறை நாட்களாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமை என தொடர்ந்து ஞாயிறு உட்பட 5 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

ஆனால் அரசு சார்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையில் கடைசி ஒரு சில தினங்களுக்கு முன் அரசாங்கம் தொடர் விடுமுறை நாட்களாக அறிவித்தது. இந்த நிகழ்வு பொங்கல் தினத்தன்றும் நடந்தன. இந்நிலையில் வருகின்ற தீபாவளி தினம் அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை வருகின்றன.

இதையொட்டி தற்போது சமூக வலைதளங்களில் அக்டோபர் 26 சனிக்கிழமை தினமும் அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் தேவைப்பட்டால் அக்டோபர் 28 திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகின்றன. இந்த தகவல் குறித்து முறையான விடுமுறை அறிவிப்பை அரசாங்கம் தான் அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
#Deepavali #Holiday #SocialMedia #Rumor #In4Net