IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வெடி வெடிக்கக்கூட ஜோசியம் பார்ப்பார்களா…?

0 59

ஜோசியம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் கடந்து செல்லும் சம்பவங்களை முன்கூட்டியே ஜோதிடர்கள் மூலம் கணித்து சொல்லும் மக்களின் ஓர் உன்னதமான நம்பிக்கையாகும்.

அன்றாட வாழ்வில் நிகழும் சுபநிகழ்ச்சிகளான திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, தொழில் துவங்குதல், குழந்தை பெயர் வைத்தல் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஜோசியம் பார்த்து வந்த மனிதர்கள் தற்போது தீபாவளி வெடி வெடிக்கக்கூட ஜோசியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆம்.சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த ஜோதிட பண்டிட் கோவிந்தராஜன் என்பவர் தீபாவளி திருநாளன்று எந்த வெடி போடலாம். எந்த நேரத்தில் மத்தாப்பு வைக்கலாம் என்று கணித்து சொல்லியிருக்கிறார். அதன்படி வருகின்ற அக்டோபர் 27 ஞாயிறு அன்று தீபாவளி திருநாள் உலகம் முழுவதும் கொண்டாட இருக்கின்றனர். அந்த நாளில் எப்போது வெடி வெடிக்க வேண்டும் என ஜோதிடர் கணித்து சொல்லியுள்ளார்.

தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மதல் 5.45 மணிவரை பேன்ஸி வெடிகள் வெடிப்பது நல்லது என்றும் மதியம் 2 மணி முதல் 4.30 மணிவரை சரவெடிகள், பட்டாசு வெடிகள் வெடிக்கலாம். அதுதான் நல்லகாலம் என்றும் கணித்துள்ளார்.

முன்பு நாம் புதிய தொழில் தொடங்குவதற்காக ஜோதிடம் பார்க்கும் காலம் போய் திருநாளில் வெடி வெடிப்பதற்கு கூட ஜோதிடம் பார்க்கும் அளவிற்கு மக்கள் ஜோதிடத்தில் முழ்கிவிட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
#Deepavali #Crackers