பிரதமர் மோடியின் 15 லட்சத்திற்காக காத்திருக்கும் தயாநிதி மாறன்

Get real time updates directly on you device, subscribe now.


தினம்தோறும் தன்னுடைய வங்கி பேலன்சை சரிபார்த்து கொண்டே இருக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி அக்கவுண்டில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் இதுவரை என் அக்கவுண்டிற்கு வந்து சேரவில்லை என தயாநிதிமாறன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் அங்கீகாரமற்ற குடியிருப்புகளை சீர்படுத்தும் மசோதா, லோக்சபாவில் நேற்று நடைபெற்றது. அதில் திமுக எம்.பி.தயாநிதிமாறன் பேசியதாவது,
கிராமங்களிலிருந்து வேலை வாய்ப்பு தேடி நகரங்களுக்கு வரும் நிலை உள்ளது. அந்த மக்கள் குடியேறுவதற்காக அங்கீகாரமற்ற குடியிருப்புகளை முறைப்படுத்துவது இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டது.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற சொல்லுக்கேற்ப ஏழை மக்களுக்கும் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் தலைவர் ஜெகஜீவன் ராம், சென்னைக்கு வந்து இவற்றை பார்த்துவிட்டு தான், டெல்லியில் “இந்திரா ஆவாஜ் யோஜனா” என்ற திட்டத்தை வகுத்தார். அதன்பிறகு தான் பாஜக அவற்றை பிரதமர் ஆவாஜ் யோஜனா என மாற்றி சொல்கிறது. எனவே அனைத்திற்கும் முன்னோடி தமிழகம் தான்.

டெல்லியில் குடியிருப்புகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மத்திய அரசு, வருகின்ற டெல்லி சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதையும் முழுமனதாக செய்யாமல் அரைகுறையாக செய்யப்படுகிறது.

தேர்தலையொட்டி பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட்டிருக்க வேண்டும். ஆனால் நான் தினந்தோறும் என் வங்கி கணக்கை சரிபார்த்து கொண்டே இருக்கிறேன். ஆனால் இதுவரை என் வங்கி கணக்கில் எந்த பணமும் வந்து சேரவில்லை. எனவே ஓட்டிற்காக அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று சொல்லாமல் மக்களின் வளர்ச்சிக்காக செய்யுங்கள் என தயாநிதி மாறன் பேசினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader