IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மூன்று மகள்களை வாய்க்காலில் வீசி கொலை செய்த கொடூர தாய்! விசாரணையில் வெளி வந்த மர்மங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.



மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசி தாயே கொலை செய்துள்ளார். அவரை கைது செய்து போலீசார் கிடுக்குபிடி விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியவதி (வயது 27). இவர்களுடைய மகள்கள் அட்சயா(வயது 6), நந்தினி(வயது 4), ஷிவானி (வயது 2) ஆகியோர் இருந்தனர்.

டிரைவரை கொன்று காரை கடத்தும் கும்பல்! வாடகை கார் ஓட்டுனர்களுக்கான எச்சரிக்கை மணி

முதல் மகள் அட்சயாவுக்கு காலாண்டு விடுமுறை. அதற்காக சத்தியவதி அவருடைய தாயார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். விடுமுறை முடிந்து நேற்று சத்தியபதி மூன்று மகள்களையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் வீட்டிற்கு இவர்கள் யாரும் செல்லவில்லை.


இவர்களை காணவில்லை என்பதால் மணிகண்டன் குழந்தைகளையும் மனைவி சத்தியாவதியையும் தேடியுள்ளனர். அவர்களை காணாததால் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். சத்தியவதியை மட்டும் கண்டுபிடித்தனர். அவரிடம் குழந்தையை பற்றி விவரம் கேட்ட போது, போலீசாரிடம் முன்னுக்கு பின்னாக சத்தியவதி பதில் அளித்துள்ளார்.

விஞ்ஞானி கொலையின் பின்னணி என்ன? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

இதனால் போலீசார் சத்தியவதியிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தைகளை வாய்க்காலில் தூக்கி வீசி கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். போலீசார் சத்தியவதியை குழந்தைகளை வீசிய வாய்க்கலுக்கு உடனடியாக அழைத்து சென்றனர். பிறகு தீயணைப்பு துறையினரை அங்கு வரவழைத்து குழந்தைகளை தேட தொடங்கினர். முதலில் அட்சயாவின் சடலம் கிடைத்தது. அதன் பின் நீண்ட நேர தேடலுக்கு பிறகே மற்ற இரு குழந்தைகளின் சடலம் கிடைத்து. அனைவரது சடலமும் பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



மேலும் இது குறித்து போலீசார் சத்தியவதியிடம் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தைகளை கொலை செய்தது ஏன்? குடும்ப தகராறில் குழந்தையை கொலை செய்தாரா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

#crime #daughter #murder #mother #kadalur

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader