IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மகளுக்கு வக்காலத்து வாங்கிய மாமியாரின் மூக்கைக் கடித்த மருமகன்!

2

மகளை வரதச்சனை கேட்டு சித்திரவதை செய்த மருமகனிடம் பஞ்சாயத்து பேச போன மாமியாரின் மூக்கை கடித்த மருமகன். இதற்கிடையே காதை அருத்த சம்மந்தி.


உத்தர பிரதேச மாநிலத்தில் நகட்டியா என்ற பகுதியில் வசித்து வருபவர் கந்தரகுமான். இவரது மனைவி குல்ஷானா. இவர்களது ஒரே மகள் சாந்த்பிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளை முகமது அஷ்பாக்கிற்கு ரூ.10 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் கணவர், மனைவி இருவரும் மணமகன் வீட்டில் வசித்து வந்தனர்.


திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், முகமது அஷ்பாக், மனைவியிடம் திரும்பவும் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டுள்ளார். இதற்கு சாந்த்பி மறுப்பு சொல்லியே வந்துள்ளார். ஆனால் ரூ. 5 லட்சம் மேற்கொண்டு வரதட்சணை பணம் வந்தாக வேண்டும் என்று கட்டாயமாக முகமது சொல்லியும், மனைவி கேட்கவில்லை. தனது பெற்றோர் ஏற்கனவே ரூ.10 லட்சம் வரதட்சணை மற்றும் சீர்வரிசைப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். இப்போது மேலும் கஷ்டப்படுத்த முடியாது என்று சாந்த்பி திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.


இதனால் ஆத்திரமடைந்த முகமது, மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த வரதட்சணை கொடுமை சம்பவம் சாந்த்பியின் அப்பா ரகுமானுக்கு தெரியவந்துள்ளது. மகளை, மருமகன் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி குல்ஷானுடன் மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது இருவீட்டாரும் வரதட்சணை பற்றி பேசியுள்ளனர். பேச்சு வார்த்தை காரசார விவாதமாக மாறியது.


ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை முகமது, தன்னுடைய மாமியார் குல்ஷானின் மூக்கை கடித்து விட்டார். இதனால வலியால் அலறி துடித்த மனைவி குல்ஷானாவை, கந்தரகுமான் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து வந்த முகமதுவின் அப்பா, சம்பந்தி என்றும் பாராமல் குல்ஷானின் காதை கத்தியால் வெட்டிவிட்டார். மருமகன் மூக்கை கடிக்க, சம்பந்தி காதை வெட்ட என ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார் குல்ஷான்.


இதை பார்த்து பயந்து போன முகமதுவும், அவரது அப்பாவும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் குல்ஷானை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பந்தமாக போலீசாரிடம் கந்த ரகுமான் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.