IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அம்பான் புயலால் 7 லட்சம் மக்கள் பாதிப்பு – அதிர்ச்சித் தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

வங்கக்கடலில் உருவாகி உள்ள அம்பான் புயலால் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அம்பான் புயல் ஓடிசாவின் 12 கடலோர மாவட்டங்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசிய அவர், புயல் கடலோர மாவட்டங்களை தாக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு மனித உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வரும் 18 அல்லது 19ஆம் தேதிகளில் புயல் ஒடிசாவை தாக்கக்கூடும் என்பதால் நிவாரண நடவடிக்கைகளில் தேசிய மீட்பு படையினர் உள்பட முக்கிய படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நவீன்பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader