IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்

0 106


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் சீதா பழம். சீதா பழம் மற்ற பழங்களின் சுவையை விட முற்றிலும் மாறுபட்ட சுவை கொண்டது. சீதாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளன. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை ஆகிய அனைத்தும்அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.


சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை சாப்பிட்டால் உடனே நின்று விடும். சிறிது ஊற வைத்த வெந்தயம் மற்றும் அதனுடன் சீதாப்பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் விரைவில் குணமாகும்.

எடையை குறைக்க வேண்டுமா? பாதாம் பருப்பு சாப்பிடுங்க


உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை கணிசமாக குறையும். சீதாப்பழம் இரத்த விருத்தியை அதிகரிக்கும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் விலகும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறையும். சீதாப்பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாறு கலந்து பருகி வர நரம்புகள் வலு பெறும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு. இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.


#custard #apple #benefits