IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கறிவேப்பிலையின் பயன்கள்

curry leafe

Get real time updates directly on you device, subscribe now.


பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கற்வேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?


அதிலும் இதனை தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் பெறலாம் தெரியுமா?


தொடர்ந்து 120 நாட்கள் கற்வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


கொழுப்புகள் கரையும்:


காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம்.


இரத்த சோகை நீங்கும்:


காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.


சர்க்கரை நோய் சீராகும்:


சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.


இதயத்தை பாதுகாக்கும்:

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கொட்ட கொழுப்புக்களை கரைப்ப தோடு நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.


செரிமானம் பிரச்சனை நீங்கும்:

அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை தினமும் மென்று சாப்பிட்டால் செரிமான பிரட்சனைகள் நீங்கிவிடும்.


முடிவளர்ச்சி அதிகரிக்கும்:

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.


சளித்தேக்கம் சரியாகும்

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.


கல்லீரல் பாதிப்பு நீங்கும்:

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.


#curry #leaves #Uses

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader