IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் – ஆப்பிள் கூட்டணியில் பேஸ் சென்சார் தொழில்நுட்பம் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் முழுவதும் போராடி வருகின்றன. இருப்பினும் சமூகப் பரவலை கடைப்பிடித்தும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பேஸ் மாஸ்குகளை பல நாடுகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் பேஸ் மாஸ்குடன் பேஸ் சென்சார் வேலை செய்ய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பேஸ் மாஸ்க் அணிந்திருந்தாலும் பேஸ் சென்சார் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் பேஸ் சென்சாரை பேஸ் மாஸ்க் அணிந்திருந்தாலும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளன.

சமீபத்தில் ஆப்பிள் அப்டேட்டில் ஆப்பிள் போனில் இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்துள்ளது. இதுதவிர ஆப்பிள் ஏபிஐ தொழில்நுட்பம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலும் ஐபோனில் ப்ளூடூத் ஆன்-ல் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்கள் அருகில் வந்தால் அலார்ட் சிக்னல் காண்பிக்கும். இவ்வாறு காண்பிப்பதன் மூலமாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து சமூக விலகலுடன் தள்ளி இருக்க உதவும். இதற்காக ஆப்பிள் கூகுளுடன் ஓர் ஒப்பந்தம் இட்டுள்ளது. இது ஐபோன் பிரியர்களிடயே வைரலாகி உள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader