IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கச்சா உருக்கு உற்பத்தி 68 லட்சம் டன் – மத்திய துறை

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற ஜூன் மாதத்தில் 68 லட்சம் டன்னாக இருந்தது என மத்திய உருக்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உருக்குதுறை அமைச்சகம் மேலும் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் எதிரொலியால் நடப்பாண்டு ஏப்ரலில் இந்திய உருக்குத் துறை நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில், மே மாதத்திலிருந்து அவற்றின் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக உருக்குத் துறை நிறுவனங்களின் கச்சா உருக்கு உற்பத்தி ஜூன் மாதத்தில் 68 லட்சம் டன்னாக மேம்பட்டுள்ளது. இது, முந்தை மே மாத உற்பத்தியைக் காட்டிலும் 17.7 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூனில் 27.2 சதவீதம் குறைந்துள்ளது. விற்பனைக்கு தயாரான உருக்கு உற்பத்தி சென்ற மே மாதத்தில் 51 லட்சம் டன்னாக இருந்த நிலையில், ஜூனில் 15.6 சதவீதம் உயா்ந்து 59 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

இருப்பினும், கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூனில் இதன் உற்பத்தி 33.3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது என மத்திய உருக்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தியை 30 கோடி டன்னாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader