விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி அவர்களை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் அரசு சார்பில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பினை இந்த திட்டம் ஈடு செய்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கேற்ற பயிர்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் சாகுபடி செய்ய உள்ள பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?

மழைவீழ்ச்சி, வெப்பநிலை, குளிர், ஈரப்பதம் போன்ற காலநிலை காரணிகளால் ஏற்படும் பாதகமான சூழ்நிலைகளால், விவசாயிக்கு பயிர் இழப்பு ஏற்படும் பொழுது, காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் பெருநஷ்டத்தை மட்டுபடுத்துவதே, வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.

பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?

பயிர் காப்பீட்டு திட்டமானது, மகசூலில் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். வானிலை அடிப்படையான காப்பீட்டு திட்டமானது, காலநிலை காரணிகளால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். மகசூல் மற்றும் கால நிலை காரணிகளை தொடர்புபடுத்தி, கால நிலை காரணி மாறுநிலை குறிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாறுநிலை குறிகளுக்கு மேல், காரணிகளின் அளவு செல்லுமேயானால், பயிர்கள் பாதிக்க தொடங்குகிறது. ஆகவே இக்காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கு, கருதப்படும் இழப்பினை அளிப்பதற்கு, இழப்பீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு வகையில் கூறவேண்டுமென்றால், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் மகசூலிற்கு பதிலாக, காலநிலை காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கான இழப்பீட்டு தொகையை அளிக்கிறது.

Intellectual Property Protection | Trade Marks

வானிலை காப்பீட்டு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் எவை?

ஆந்திரபிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்தியபிரதேசம், மஹராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வானிலை காப்பீட்டு திட்டம், கரீப் 2003லிருந்து முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டமானது, விவசாயிகளுக்கு, பாதகமான காலநிலை காரணிகளால் ஏற்படும் சேதத்தை ஈடுகட்டும் விதத்தில் தனிசிறப்பு வாய்ந்தது. இத்திட்டம் கரீபில் ஏற்படும் பாதகமான மழை வீழ்ச்சிக்கும் (குறைவான மற்றும் அதிகமான) மற்றும் ரபியில் ஏற்படும் பாதகமான காலநிலை காரணிகளான குளிர், வெப்பம், ஈரப்பதம் மற்றும் பருவமற்ற மழைக்கும், காப்பீடு அளிக்கிறது. இது மகசூல் உத்திரவாத காப்பீடு திட்டமல்ல.

இந்த காப்பீட்டு திட்டம் இயங்கும் முறை என்ன?

இந்த திட்டமானது, பரப்பு முறை (Area Approach) எனும் கோட்பாட்டினை கொண்டுள்ளது. எல்லாவற்றிலும் ஒத்துப்போவதாக கருதப்படும் ஒரு பரப்பினை, மேற்கோள் பரப்பாக Reference unit area) கருதி, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த பரப்பானது, அரசாங்கத்தால் பயிர் காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு பயிர் காப்பீட்டாளருக்கும் இப்பரப்பிற்கு ஒத்துப்போகும் வகையில் கோரிக்கைகள் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மேற்கோள் பரப்பும், மேற்கோள் வானிலை மையத்துடன் (Reference Weather Station) இணைக்கப்பட்டு, அந்த நிலையத்தின் காலநிலை குறிப்புகளை பெற்று, கோரிக்கைகளுடன் உட்படுத்தப்படும்.

Intellectual Property Protection | Trade Marks

நடப்பு பருவத்தில் ஏதேனும் பாதகமான காலநிலை ஏற்பட்டு இருந்தால், இத்திட்டத்தின் நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுக்கு உட்பட்டு, இழப்பீட்டு அமைப்பிற்கு ஏற்றவாறு, காப்பீட்டு தொகை அளிக்கப்படும். பரப்புமுறை அணுகுமுறை தனிப்பட்ட அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது. தனிப்பட்ட அணுகுமுறையில் இழப்பீடானது தனிப்பட்ட காப்பீட்டு விவசாயிகளின், நஷ்டத்தை மதிப்பீடு செய்யும். மேற்கோள் வானிலை நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் நிலவும் வானிலையானது, அதனுடன் இணைக்கப்பட்ட பண்ணைகளில் நிலவும் வானிலைப்போலவே இருக்கும். ஒரே நாளில் வானிலையானது (குறிப்பாக மழைவீழ்ச்சி) சிறிய அளவிலேயே வேறுபட வாய்ப்பு உண்டு. ஆனால் பதினைந்து நாட்களுக்கோ, மாதத்திற்கோ அல்லது ஒரு பருவத்திற்கோ கணக்கிடப்படும்போது இந்த வேற்றுமை மறைந்துவிடும். எனவே ஒரு வட்டத்தில் உள்ள மேற்கோள் வானிலை மையத்தின் வானிலை, மேற்கோள் பரப்பிலுள்ள அனைத்து பண்ணைகளின் வானிலையை குறிப்பதாக அமையும்.

இந்த திட்டத்தை வாங்குவதற்கு தகுதியானவர்கள் யார்?

அனைத்து விவசாயிகளும் (வார சாகுபடியாளர் மற்றும் குத்தகை சாகுபடியாளர் உட்பட) இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் நிறுவனங்களிடமிருந்து, பயிருக்கான கடனை பெற்றவர்களுக்கு இத்திட்டம் அவசியமாகும். மற்றவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப.

காப்பீட்டு பாதுகாப்பு தொகை (உறுதிதொகை) கணக்கிடுமுறை

காப்பீட்டாளர் பயிரை விளைவிக்க தேவையான உட்பொருட்களுக்கு ஆகும் செலவே, உறுதி தொகை ஆகும். மாநில அரசாங்கத்தின் வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னர், AIC ஆனது, பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே, பயிரை விளைவிப்பதற்கான உறுதி தொகையை அறிவித்து விடும். இது பயிர்கள் மற்றும் RUA பொறுத்து மாறுபடும். மேலும் உறுதி தொகையானது, காலநிலையின் காரணிகளின் முக்கியதுவத்தை பொறுத்து, பிரித்து வழங்கப்படும்.

காப்பீட்டுத் தொகை

எதிர்பார்க்கப்பட்ட நஷ்டத்தை பொறுத்து, காப்பீட்டுத் தொகை அமைகிறது. எதிர்பார்க்கப்பட்ட நஷ்டமானது, 25லிருந்து 100வருடங்களுக்கு உட்பட்ட காலநிலை காரணிகளை, கொண்டு பெறப்படுகிறது. காப்பீட்டு தொகையானது, பயிர் மற்றும் RUA-வை பொறுத்து மாறுபடும். விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையில், உச்சவரம்பிட்டு அதற்குமேல் செல்லும் காப்பீட்டு தொகையை, மத்திய அரசும் மாநில அரசும் 50:50 விகிதத்தில் பிரிமீயம் தொகையினை பகிர்ந்து கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.

#farmers #vivasayam #payir kaapitu thittam #in4net

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader