IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிய கலெக்டர்

0 20

பறவைகளின் பாதுகாப்பிற்காக பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருவதை கண்டு வனத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் சேர்ந்து கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே உள்ள வேட்டங்குடிப்பட்டி என்ற கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த கிராமத்திற்கு பருவ காலங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. பட்டாசு மூலம் வரக்கூடிய சத்தம் மற்றும் புகையினால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் வெடி வெடிப்பதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

பறவைகளின் நலனுக்காக வேட்டங்குடிப்பட்டி, கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கோவில் திருவிழா காலங்களிலும் வான வெடி மற்றும் அதிக சத்தத்தை தரக்கூடிய வெடிப் பொருட்களை வாங்குவதில்லை.

வேட்டங்குடிப்பட்டி கிராம மக்கள் பகுதிக்கு வருகின்ற பறவைகளுக்கு செய்யும் தியாகத்திற்குகாக வருடம் தோறும் வனத்துறை சார்பாக இனிப்புகள் கொடுத்து கிராம மக்களை கவுரவிக்கின்றனர்.

இந்த நிகழ்வை கோள்விப்பட்ட சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கிராம மக்களை பாராட்டி இனிப்பு வழங்கினார்.

அதன் பின்னர் கிராம மக்கள் கலெக்டரிடம் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை சாலை வசதி, பறவைகள் சரணாலயப்பூங்கா மற்றும் கண்மாய் பகுதியை சரிசெய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் ஜெயகாந்தனும் உடனடியாக சரிசெய்து தரப்படுவதாக கிராம மக்களுக்கு உறுதியளித்தார்.

இந்த கிராம மக்களை போல எல்லா இடங்களிலும் மக்கள் காற்றை மாசுப்படுத்தாமல் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நம்மை சார்ந்து இருக்ககூடிய இயற்கைக்கும் மக்களுக்கும் நன்மை தரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

#crakers #less #villages #collector