IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக்

0 13


சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசு, சில நாட்களாக சாணம் மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிக்குள்ளானது. அதனால் பசுவை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் அழைத்து சென்றார். அங்கு பசுவை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், கழிவுகளை அகற்றுவதற்காக சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.


#cow #stomach #52kg #plastic