IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

100 ஆண்டுகளில் இல்லாத வராக்கடன், பொருளாதார பாதிப்பு அதிகரிக்கும் – ஆர்.பி.ஐ

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் வங்கிகளின் வராக்கடன் அதிகரிக்கலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். எஸ்பிஐ வங்கியின் பொருளாதார கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் சுகாதாரம், பொருளாதாரம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நாட்டின் உற்பத்தி, வேலை, நல்வாழ்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பொருளாதார, சுகாதார பாதிப்பை சந்தித்து வருகிறோம். நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பெருந்தொற்று தற்போதைய உலகின் வழக்கம், மதிப்பீடு, தொழிலாளர், முதலீடு இயக்கத்தை உலக அளவில் பாதித்துள்ளது.

சாதகமான சூழல் வரும்வரை, இடர்களை தாங்கும் வகையில் வங்கிகள் தங்கள் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி சூழலையும், முதலீட்டையும் வலிமையாக்க வேண்டும்.

கொரோனாவுக்குப் பிறகு அது பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக வங்கிகளின் வராக்கடன் அதிகரிக்கலாம். முதலீடுகள் குறையும் வாய்ப்புள்ளது. தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு திட்டம் மிகவும் அத்தியாவசியமானதாகும்” என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader