IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனையின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி மருத்துவமனை சார்பில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து விட்டதாக இன்று காலை வெளியான தேமுதிக கழக செய்திக் குறிப்பில் வெளியிட்டிருந்த நிலையில் மருத்தவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader