IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எந்தப்பக்கம் போனாலும் அணை கட்டுறாங்களே! சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

0 63

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு 3 நாட்கள் வயிற்றுவலி காரணமாக இடைக்கால ஜாமீன் கோரி அவரது சார்பில் வக்கீல் கபில் சிபல் இன்று டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால் நீதிமன்றம் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் சிதம்பரத்தின் வக்கீல் கபில் சிபல் ஆவேசமடைந்து மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதியின் தலையீட்டை அடுத்து மீண்டும் வாதாடினார். பின்னர் நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் குடும்ப டாக்டர் டெல்லி வந்து சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கலாம் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமீன் மனு நிராகரித்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.