IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பை சமைத்த தம்பதிகள்

66

 

பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பு நாம் வாழும் வீட்டிற்குள் வந்தால் கொலையே நடுங்கும். பாம்பு வீட்டின் குளிர்சாதன பெட்டி, கழிப்பறை போன்ற இடங்களில் புகுந்துள்ளது. இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாம்பு அந்தவகையில் சமையல் அறையில் உள்ள ஓவனில் நுழைந்துள்ளது.

அம்பர் மற்றும் ராபர்ட் தம்பதியினர் வட கரோலினாவில் உள்ள வேக் வனப்பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் நண்பர்களுடன் பீட்ஸா சமைத்து சாப்பிட முடிவு செய்தனர். பின்னர் இருவரும் பீட்ஸா சமைக்க தேவையான பொருட்களை தயார் செய்தனர். அடுத்ததாக அவர்கள் தங்கள் வீட்டில் இருந்த ஓவனில் பீட்ஸாவை சமைத்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து புகையுடன் கடுமையான துர்நாற்றம் வீசியது. அவர்களும் எங்கிருந்து இந்த துர்நாற்றம் வீசுகிறது என்று பார்த்தனர். பின்னர் இது சமையல் அறையில் இருந்துதான் வருகிறது என்று கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து ஓவனை திறந்து பார்த்த போது பீட்ஸாவுடன் பாம்பையும் சேர்த்து சமைத்தது தெரியவந்தது. அதை பார்த தம்பதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

 

#couple #cooked #snack #pizza