IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நாட்டின் பொருளாதாரம் ஐசியுவில் உள்ளது மீட்க டாக்டர்கள் தேவை : ப. சிதம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

 

தகுதியற்ற டாக்டர்கள், நாட்டின் பொருளாதாரத்தை ICU வில் தள்ளி விட்டனர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். அப்போது, பொருளாதார வீழ்ச்சியை மத்திய அரசு ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பொருளாதார சரிவை மறுப்பது, தவறுகளை ஒப்புக்கொள்ளாததே நாட்டின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை எனவும் கூறியுள்ளார்.

வருவாய் குறைந்துவிட்டதால் முக்கிய திட்டங்களில் செலவிட மத்திய அரசிடம் பணமில்லை என்றும், ஐ.சி.யு-வில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க திறமையான மருத்தவர்கள் தேவை எனவும் அவர் கூறினார். மேலும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் போன்ற திறமையான டாக்டர்கள் நாட்டை விட்டு சென்று விட்டனர். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் போன்றவர்களும் வெகு காலம் இருக்க முடியாது என்றார்.

நிர்மலா சீதாராமனின் நீண்ட பட்ஜெட் உரை அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் களைப்பை ஏற்படுத்தியதாக விமர்சித்த அவர், பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள ஒரு யோசனை கூட பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

#country’s #economy #ICU #needDoctors #Pchidambaram

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More