கார் விற்பனையில் மகத்தான சாதனை புரிந்த காம்பேக்ட் எஸ்யுவி மாருதி சுசூகி விடாரா ப்ரீஸா

Get real time updates directly on you device, subscribe now.

  • இந்தியாவில், இந்தியாவுக்கான கருதுகோளுடன் வடிவமைக்கப்பட்ட ப்ரீஸா தொடர்ந்து வாடிக்கையாளர்களைப் பரவசப்படுத்துறது
  • விடாரா ப்ரீஸா சப்-காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் புதிய வடிவில் ஆற்றல் மிகு 1.5 லிட்டர் கே-வரிசை பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சினுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது

இந்தியாவின் நெ.1 காம்பேக்ட் எஸ்யூவி மாருதி சுசூகி விடாரா ப்ரீஸா மிகக் குறைந்த 4.5 ஆண்டுகளிலேயே 5.5 லட்சம் விற்பனை செய்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. வேறெந்த காம்பேக்ட் எஸ்யுவி-ஐ விடவும் இதுவே அதி வேகமான விற்பனையாகும். 2016 தொடக்கத்தில் அறிமுகமான விடாரா ப்ரீஸா, காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் வேறெதிலும் இல்லாத வகையில், கண்கவர் தோற்றம் மூலம் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தோற்றம், செயல்பாடு மற்றும் எளிதாக ஓட்டும் வசதி உள்ளிட்ட அனைத்திலும் முழுமையான பேக்கேஜ் என விமர்சகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஒரே மாதிரியான பாராட்டை உடனடியாகப் பெற்றது. தொடக்கம் முதற்கொண்டே விடாரா ப்ரீஸா காம்பேக்ட் எஸ்யுவி வாடிக்கையாளர்களின் வளரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் வித்தியாசமான லைஃப் ஸ்டைல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யப் புத்தம் புதிய விடாரா ப்ரீஸா இவ்வாண்டுத் தொடக்கத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புத்துணர்வு பெற்றது. உறுதியான மற்றும் ஆற்றல் மிகு 4 சிலிண்டர் 1.5 லிட்டர் கே-சீரீஸ் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சினுடன், அதிக விருதுகளை வாங்கிக் குவித்துள்ள காம்பேக்ட் எஸ்யூவி, ஆற்றல், ஸ்போர்ட்டினெஸ் மற்றும் ஈடு இணையற்ற ஓட்டும் அனுபவ வசதியை முழுமையாக வழங்குகிறது.

விடாரா ப்ரீஸாவிலுள்ள வித்தியாசமான சாதக அம்சம் ஹூடுக்குக் கீழே பெரிய, ரெஸ்பான்சிவ் மற்றும் பெப்பி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்துக்கேற்ப அற்புதமான சுத்திகரிப்பும், ஈடு இணையற்ற ஆற்றலும் கிடைக்கும்.

வெற்றி குறித்து மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் செயல் இயக்குனர் (சந்தை & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் 挿அறிமுகம் தொடங்கி விடாரா ப்ரீஸா காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் முன்னிலை வகித்து வருகிறது. முன் மாதிரியாக எஸ்யுவி வாங்குவோரை அதன் உறுதியான வடிவமைப்பு மொழி, ஆற்றல்மிகு செயல்பாடு மற்றும் ஸ்போர்ட்டியான அம்சங்களுடன் கவர்ந்தது. குறைந்த காலத்திலேயே அதிக விருது பெற்ற காம்பேக்ட் எஸ்யுவியாகவும், விற்பனை அட்டவணையிலும் சாதனை படைத்தது.

Intellectual Property Protection | Trade Marks

ஏராளமான டிசைன் அப்டேட்களுடன் கூடிய ஆற்றல்மிகு 1.5 எல் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் காரணமாக விடாரா ப்ரீஸா வாடிக்கையாளர்களை இன்னும் குதூகலப்படுத்தி பிரிவில் முன்னணி இடத்தை இன்னும் வலுவாக உறுதிப்படுத்தியது. விடாரா ப்ரீஸாவின் 5.5 லட்சம் விற்பனை மைல்கல் என்னும் சாதனை, புதியவற்றைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் விருப்பம் மற்றும் சந்தையின் போக்குகளுக்கு ஏற்ப மாருதி சுசூகி தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்னும் எங்களது முனைவுக்கும் சான்றாக உள்ளது・என்றார்.

வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் விகிதாசாரங்களின் இடைக்கணிப்பு ஆகியவை சம்மந்தப்பட்ட பிரிவிலுள்ள ஏனைய எஸ்யுவிக்களை விடவும் ப்ரீஸாவை வித்தியாசமாகவும், மாபெரும் வெற்றி பெறவும் உதவியுள்ளன. மிகச் சரியான எந்திரமாக வெளிப்படுத்தும் வகையில், அசத்தலான எஸ்வியூ அம்சங்களுடன், ட்யூயல் டோன் ரூஃப், புதிய எல்இடி முகப்பு விளக்கு, ஸ்போர்ட்டி இண்டீரியர்கள் கொண்ட டிஆர்எல் என எழிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் அம்சம் கொண்ட மேம்பட்ட தானியக்க டிரான்ஸ்மிஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

விடாரா ப்ரீஸாவிலுள்ள ட்யூயல் பேட்டரி சிஸ்டம் காரணமாக ஆட்டோமேடிக்கு லிட்டருக்கு / 18.76 கிமீ மற்றும் மேனுவலுக்கு லிட்டருக்கு / 17.03 கிமீ என ஈடு இணையற்ற எரிபொருள் திறனைத் தருகிறது. ரீஜெனரேடிவ் பிரேக் எனர்ஜியுடன் இதில் ஐடில் ஸ்டாப்-ஸ்டார்ட் மற்றும் டார்க் அசிஸ்ட் இயக்கங்களும் உள்ளன. கூடுதலாக இன்டியூடிவ் தொழில்நுட்பம் அம்சங்கள் விடாரா ப்ரீஸாவின் சமீபத்திய வெர்ஷனின் வெற்றிக்கு விளக்கமளிப்பதாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் 1.5 எல் பெட்ரோல் எஞ்சினை மனதார ஏற்றுக் கொண்டதால், சிறிய பெட்ரோல் எஞ்சின்கள் நிறைந்த பிரிவில் விடாரா ப்ரீஸாவுக்கு வித்தியாசமான அனுகூலம் கிடைத்துள்ளது. பெரிய, இயலிழுப்பு பெட்ரோல் எஞ்சின் என்பதால், குறைந்த கியர் மற்றங்களிலேயே அனைத்து ஆர்பிஎம்களில் அதிக டார்க் மற்றும் லைனியர் ஆற்றலைத் தரும். இது இயல்பாகவே எரிபொருள் சிக்கனம், மேம்பட்ட சுத்திகரிப்பு அளவுகள், உயரிய என்விஹெச் ஆகியவற்றை வழங்கும்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான புத்தம் புதிய விடாரா ப்ரீஸா மிகக் குறைந்த 6 மாத காலத்துக்குள் 32,000 அலகுகளை விற்றுச் சாதனை படைத்துள்ளது. மேலும் காம்பேக்ட் எஸ்யுவிக்களிலேயே, குறிப்பாக பாரம்பரியமாக டீசல் பயன்பாட்டில் ஓடும் வாகனங்களின் பிரிவில், அதிக விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் எஸ்யுவிக்கள் என்றாலே டீசல் என்னும் தொன்மத்தை உடைத்துள்ளது.

#marutisuzuki #vitarabreeza #india’sbestseller #in4net

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More