IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சூப்பர் மார்க்கெட் தொழிலை தேர்ந்தெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

0 3

பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஊரிலும் ஓரிரு சூப்பர் மார்க்கெட்கள் இருந்தன. பிறகு கண்ணன், ஜெயசூர்யா, ஸ்பென்ஸர், புட் வேர்ல்டு , நீல்கிரீஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் எல்லா நகரங்களிலும் கடைகளை திறந்தார்கள்.

இதன் அடுத்த கட்டமாக ரிலையன்ஸ், பிர்லா குழுமத்தின் மோர், பிக் பஜார் , டிமார்ட் போன்ற கார்பரேட்கள் சூப்பர் மார்க்கெட்டில் இறங்கினார்கள். இப்போது அடுத்த கட்டமாக பெரிய பெரிய ஜவுளி கடைகள், நகை கடைகள் போன்றவர்களும் இதில் இறங்கியுள்ளார்கள் .

போத்தீஸ் நிறுவனம் தனது பாண்டிச்சேரி கிளையில் சூப்பர் மார்க்கெட்டை துவங்கியது . அதில் வெற்றி பெறவே , தற்போது சேலம் கிளையிலும் பிரம்மாண்ட கடையை திறக்க உள்ளது. இதனால் தங்களுடைய ஜவுளி வியாபாரம் பாதிப்படையலாம் என நினைக்கும் சென்னை சில்க்ஸ் நிறுவனமும் தற்போது சூப்பர் மார்க்கெட்டை துவங்கியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சிறிய கடைகளுக்கு ரொக்கத்திற்கோ அல்லது அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே கடன் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதிரி பெரிய நிறுவனங்களுக்கு 3 முதல் 6 மாதம் வரை கடன் தருகின்றன.

எனவே இதில் ரொட்டேஷனுக்கு கிடைக்கும் தொகையை கொண்டு அடுத்தடுத்த கிளைகளை தொடங்கி கொண்டே போகிறார்கள். மேலும் வேலைக்காரன் படத்தில் வருவது போல , பெரிய கடைகலில் 25% அத்தியாவசிய பொருட்களும் , 75% தேவையில்லாத பொருட்களும் விற்பனை ஆகிறதாம் .