IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

க்ரீன்கார்டுக்கு ஆப்பு! அமெரிக்க இந்தியர்களின் கதி இனி என்னவாகும் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன்கார்டுகள் வழங்குவதை அடுத்த 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்ப்படுவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

உலகளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தினமும் 2000-த்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அமெரிக்கா நிலைகுழைந்து தடுமாறியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதனை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பதற்கான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கர்களின் வேலையை பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் சரியாகும் போது அமெரிக்க குடிமக்கள் வேலை வாய்ப்பு பெற இது வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடை உத்தரவு கொரோனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்துகொண்டு டிரம்ப் அவரது நீண்டநாள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சனத்தை முன் வைக்கின்றார். கிரீன்கார்டு நிறுத்தி வைப்பு அமெரிக்கர்களின் நலனுக்காக தான் என டிரம்ப் தெரிவிக்கிறார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader