IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மருத்துவர்களின் பேச்சை உதறிய டிரம்ப்! கலக்கத்தில் மக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை தடுக்க மருத்துவர்கள் நோயாளிகளுடன் போராடி வருகின்றனர்.

கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரையை தினமும் எடுத்துக் கொள்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. இந்நிலையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா வாங்கியது.

ஆனால் அந்த மருந்தை பயன்படுத்தினால் இதய துடிப்பு அதிகமாகி பக்க விளைவுகள் ஏற்படும். அதன் காரணமாக அதனை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதிபர் டிரம்போ அந்த அட்வைசை ஒதுக்கிவிட்டு தினமும் மாத்திரையை சாப்பிட்டு வருவதாக தெரிகிறது. அதாவது நாள்தோறும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஒன்றை தான் உண்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எத்தனை பேர் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள், முதல் வரிசை ஊழியர்கள் அனைவரும் எடுத்துக் கொள்கிறார்கள்.

நானும் இந்த மருந்தை 2 வாரங்களாக எடுத்துக்கொள்கிறேன். அந்த மாத்திரையை பற்றி தெரிந்து கொண்டு தான் அதை எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader