IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ? ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது என்ற இடத்தை சீன விஞ்ஞானி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹாங்காங் பொது சுகாதாரப் பள்ளியில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தவர் டாக்டர் லி மெங்-யான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பணியாற்றிய போது சார்ஸ் போன்ற ஒருவகை வைரஸின் பாதிப்பு பலருக்கும் ஏற்படத் தொடங்கியதை கவனித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணையில் இறங்கிய லி மெங்-யான், இதன் பின்னணி குறித்து பல தகவல்களைச் சேகரித்ததாக கூறப்படுகிறது. இதனை தன்னுடைய மேற்பார்வையாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் காணாமல் போய் விடுவாய் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் சீனாவிலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் வுஹானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக பொதுவெளியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், நடந்த உண்மைகள் இவை தான் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தன்னிடம் அறிவியலல் பூர்வமான ஆதாரம் இருக்கிறது. கொரோனா வைரஸ் மனிதர்களால் தான் உருவாக்கப்பட்டது. அதுவும் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது பொதுமக்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சீன அரசிற்கு முன்பே இதைப்பற்றி நன்கு தெரியும். வைரஸின் ஜீனோம் தொடரானது மனிதர்களின் கைரேகை போன்று காணப்படுகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader